tamilnadu

img

விசைத்தறி தொழிலாளர் ஆகஸ்ட் 2-ல் ஆர்ப்பாட்டம்

நாமக்கல். ஆக.1- நலவாரியங்களின் செயல்படா தன்மை யை கண்டித்து ஆகஸ்ட் 2ல் தமிழகம் முழுவதும் நலவாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என விசைத்தறி தொழிலாளர் சம்மேள னம் அறிவித்துள்ளது. சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழி லாளர் மாநில சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் பி.முத்துசாமி தலைமையில் நாமக்கல்லில் நடை பெற்றது.  மாநில பொதுச் செயலாளர்  எம். சந்திரன், மாநில பொருளாளர் எம்.அசோ கன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு முழுவதும் முறைசாரா நலவாரியங்களின் செயல்படா தன்மை யால் பணப்பயன்கள் தாமதம், பதிவு புதுப் பித்தல் போன்றவை எதுவும் நடைபெற வில்லை. இதனால் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே, ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று மாநி லம் முழுவதும் நலவாரிய அலுவலகங்கள் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்து வது என முடிவு செய்யப்பட்டது.