tamilnadu

img

கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி

வாஷிங்டன்
உலகை மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது அமெரிக்காவை மையம் கொண்டுள்ளது. அங்கு இதுவரை 11 லட்சத்து 31 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 65 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். ஆறுதல் செய்தியாக 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் ஆகிய மூன்று கண்டங்களின் 68 பகுதிகளில் உள்ள 1,063 பேருக்கு ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும் இந்த மருந்தை கொரோனா வைரஸுக்கு பயன்படுத்த அமெரிக்காவின் கிலியட் என்ற மருந்து நிறுவனம் தெரிவித்தது. 

இதையடுத்து, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு கிலியட் நிறுவனத்தின் ரெம்டெசிவிர் மருந்தை அவசரகால பயன்பாட்டிற்கு வழங்கலாம் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்டிஏ) அங்கீகாரம் வழங்கி உள்ள நிலையில், 15 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை நன்கொடையாக அளிப்பதாக கிலியட் நிறுவனம் கூறியுள்ளது. இந்த மருத்துவ உதவி 1 லட்சத்து 40 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 
 

;