tamilnadu

img

மழைக்கு வாய்ப்பு

 சென்னை,டிச.18- வெப்பச்சலனம் காரண மாக தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளி யிட்டுள்ள அறிவிப்பில், வரும் 20 ஆம் தேதி தென் தமி ழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பி ருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  நாகை மாவட்டம் வேதாரண் யத்தில் 3 செ.மீட்டரும், ராம நாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்  மங்கலம், பாம்பன், தொண்டி, நாகை மாவட்டம் சீர்காழி ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ ட்டரும் மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்து டன் காணப்படும், சில பகுதி களில் லேசான மழை பெய்  யக்கூடும் என்றும் தெரி வித்துள்ளது.