முதல் படம் : வன்முறையற்ற, போதையற்ற தமிழகம் என்ற முழக்கங்களுடன் கோட்டை நோக்கி அணிவகுத்துவரும் ஜனநாயக மாதர் சங்கத்தின் நடைபயணக்குழுவினருக்கு காவேரிபாக்கம் பேருந்து நிலையம் அருகே நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் சிஐடியு தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். சிஐடியு மூத்த தலைவர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
உள்படம் : வேலூர் மாவட்டம் வாலாஜா நகராட்சி அருகில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா கலந்து கொண்டு மாதர் சங்க நடைபயணம் வெற்றி பெற வாழ்த்திப் பேசினார்.