tamilnadu

img

ரிசர்வ் வங்கியின் நிதிக் கல்விக்கான புதிய வியூகம்- 5 சி திட்டம்

நிதிக் கல்விக்கான முதல் தேசிய வியூகத்தின் கீழ் செய்யப்பட்ட முன்னேற்றம்  திட்டங்களை இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மகேஷ் குமார் ஜெயின் ஆகஸ்ட் 20, 2020 அன்று வெளியிட்டார்.

இந்த நிதிக் கல்விக்கான தேசிய வியூகமானது  (NSFE) 2020-2025, நிதிக் கல்வி கட்டுப்பாட்டாளர்கள் அனைவருடனும்  கலந்தாலோசித்த பின்னர் ,தேசிய கல்விக்கான தேசிய மையம்  இதை (NCFE) தயாரித்துள்ளது என தெரிவிக்கிறார்,  ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் மகேஷ் குமார் .

இந்திய ரிசர்வ் வங்கியின் , இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஐஐ) மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ), நிதி சேவைகள் துறை (டிஎஃப்எஸ்) மற்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தலைமையிலான நிதி சேர்க்கை மற்றும் நிதி எழுத்தறிவு (டிஜிஎஃப்ஐஎஃப்எல்) தொழில்நுட்பக் குழு  போன்ற பல அமைப்புகளின்  உதவியுடன் நிதிக் கல்விக்கான வியூகம் உருவாகியிள்ளது.

நிதிக் கல்விக்கான புதிய வியூகத்தின்(NCFE) நோக்கம் :

மக்களின் பல்வேறு பிரிவுகளுக்கு அவர்களின் பணத்தை சிறப்பாக நிர்வகிக்கவும், அவர்களின் எதிர்காலத்தைத் திட்டமிடவும் தேவையான அறிவு, திறன்கள், அணுகுமுறை மற்றும் நடத்தை ஆகியவற்றை வளர்ப்பதற்கு மாணவர்களுக்கு இந்த நிதி கல்வியறிவு உதவும் என்பது அதன்  நோக்கம் .

 புதிய வியூகத்தின் 5 சி திட்டம்:

தேசிய கல்விக்கான தேசிய 2020-2025 மையத்தில் உள்ளடக்கம் (Content), திறன்(Capacity), சமூகம்(Community), தொடர்பு (Communication )மற்றும் ஒத்துழைப்பு (Collaboration)  போன்ற ‘5 சி’ திட்டதை பின்பற்ற பரிந்துரைக்கிறது. .

இந்த நிதிக் கல்வியானது  ஆறாம் முதல் பத்தாம் வகுப்பு வரை  பள்ளி மாணவர்கள் மற்றும் B.Ed./M.Ed போன்ற படிப்பு  மாணவர்களுக்கு கற்பிக்க பரிந்துரைக்கப்படும் என்று தேசிய கல்விக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இதற்காக நிதி கல்வியறிவு மொபைல் செயலியை ( financial literacy mobile app ) அறிமுகப்படுத்த உள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.

கொரோனா காலத்தில் மத்திய பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மாணவர்களுக்கு பல்வேறு அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், நிதிக் கல்வி என்ற புதிய வியூகத்தையும் மாணவர்களிடையே திணிப்பது, மாணவர்களுக்கு மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

 

;