tamilnadu

img

ஈரான் ராணுவ ஜெனரல் கொலை

சிபிஎம் கண்டனம்

டெஹ்ரான், ஜன.4- ஈரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசிம் சுலைமானி கொல்லப்பட்டது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பிரச்சனையை இன்னும் தீவிர மாக்கியுள்ளது.  பராக் ஒபாமாவின் ஆட்சியின்போது மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா பகுதி களுக்கான வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரான ஃபிலிப் கார்டன், இந்த கொலை, ஈரானுக்கு எதிராக அமெரிக்காவால் விடுக்கப்பட்ட போருக்கான அழைப்பு என குறிப்பிட்டுள்ளார். ஈரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு (குட்ஸ் படை ) ஈரானிய ராணுவப்படையில் வெளிநாட்டு நடவடிக்கைகளை கையாளும் ஒரு பிரிவு. ஈரானிய ராணுவப் படையை வலு வாக்குவதிலும் விரிவுபடுத்துவதிலும் முக்கிய பங்காற்றியவர் காசிம் சுலைமானி. ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா கொடுத்த அழுத்தம் மற்றும் பொருளாதாரத் தடை ஆகியவைக்கு ஈரான் எடுத்த பதில் நடவடிக்கைகளில் முக்கிய மான பங்காற்றியவர் ஆவார்.

இராக்கில் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட சிறு தாக்குதல்களுக்கு ஈரான் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஈரானின் நட வடிக்கையான, வளைகுடா பகுதியில் டேங்கர் கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அமெரிக்க வான்வழி விமானங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், சௌதி எண்ணெய் கிடங்கின் மீது நடத்தப்பட்ட முக்கிய தாக்குதல் என எதற்கும் அமெரிக்கா நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஏவு கணை தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானிய ஆத ரவு படைகள் என நம்பப்படும் படைகள் மீது ஏற்க னவே அமெரிக்கா தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்காவின் பென்டகன் வெளி யிட்டுள்ள அறிவிப்பில், ஈராக்கிலுள்ள அமெ ரிக்க வெளியுறவு அதிகாரிகள் மற்றும் பாது காப்பு படைகளில் இருப்பவர்கள் மீது தாக்கு தல் நடக்கயிருந்ததை நிறுத்தும் நோக்கத்தி லேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி யிருந்தது.

அமெரிக்காவின் இத்தகைய அத்துமீறல் தாக்குதல் நடவடிக்கைக்கு உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டிருப்பதற்கு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது:

ஈரான் நாட்டின் ஆயுதப்படை களின் உயர் அதிகாரியான ஜெனரல் காசிம் சுலைமானி, பாக்தாத் விமான நிலையத்திற்கு வெளியே ட்ரோன் தாக்குதல் மூலமாகக் கொல்லப் பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு கடும் கண்டனம் தெரி வித்துக் கொள்கிறது. ஓர் இறையாண்மைமிக்க நாட் டின் ஆயுதப்படைகளின் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது, டிரம்ப் நிர்வாகத்தால் மேற்கொள் ளப்பட்டுள்ள ஒரு சர்வதேசக் கொள்ளை நடவடிக்கையாகும். இது, மேற்கு ஆசியா மற்றும் வளை குடா பிராந்தியத்தில் கணக்கிடமுடி யாத அளவிற்கு பாதிப்புகளை ஏற் படுத்திடும். இதன் விளைவாக ஏதே னும் மோதல் மற்றும் வன்முறை ஏற் பட்டால் அதற்கு அமெரிக்காவே பொறுப்பாகும்.

மோடி அரசாங்கம் “மூத்த ஈரானிய தலைவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டிருக்கிறார் என்று குறித்துக்கொள்ளப்பட்டது,” என்று மட்டும், இத்தகைய கடும்கொடிய நடவடிக்கையை ஏற்கவில்லை என்றுகூட சொல்லாமல் வெறு மனே கூறியிருப்பது துரதிர்ஷ்டவச மாகும். இது, இந்த அரசாங்கம் அமெரிக்காவிடம் குனிந்துநிற்கும் கூட்டணியாக மாறியிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இவ்வாறு அரசியல் தலை மைக்குழு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;