tamilnadu

img

அமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை, பிப். 7- திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளி யிட்ட அறிக்கையில், குருப் 1 தேர்வு முறை கேடு தொடர்பான வழக்கை மத்திய குற்றப்  பிரிவு விசாரிக்கத் தொடங்கிய போது, மலை யளவு ஊழல் நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாகவும், மத்தியக் குற்றப் பிரிவு ஆய்வாளராக இருந்த விசாரணை அதி காரி செங்குட்டுவன், நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த அறிக்கையில், மனித நேயம் மற்றும் அப்போலோ பயிற்சி மைய இயக்குநர் சாம்  ராஜேஸ்வரன் பல முறைகேடுகள் செய்துள் ளார் எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் ஸ்டா லின் கூறியுள்ளார். கேள்வித் தாள்களை தயாரித்தல், விடைத்தாள்களை திருத்துதல் பணியில் ஈடு பட்டுள்ள பேராசிரியர்களுடனும் தேர்வா ணைய ஊழியர்கள் சிலருடனும் சேர்ந்து சாம் ராஜேஸ்வரன் பல முறைகேடுகள் செய்தி ருப்பது, அவர்கள் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததிலிருந்து தெரியவந்துள்ளது என்று காவல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டு இருந்ததாகவும் ஸ்டாலின் தெரி வித்துள்ளார். சாம் ராஜேஸ்வரனின் அப்போலோ பயிற்சி மையத்தில் 2018-ல் மத்திய குற்றப்  பிரிவு காவலர்கள் சோதனை செய்து,  பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றிய தாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எனவே மனிதநேயம், அப்போலோ பயிற்சி மையங்களை நோக்கி விசாரணை செல்வதை விரும்பாத மேலிடம், முறையாக விசாரணை நடத்திய காவல் அதிகாரிகள் குழுவை கலைத்து விட்டு, ஆய்வாளர் செங்குட்டுவனை மாற்றி விட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 2019 ஜூன் மாதம் விசாரணை அதிகாரி யான உதவி ஆணையர் சுந்தரவதனன் தாக்  கல் செய்த அறிக்கையிலும், குரூப் 1 தேர்வின்  3 விடைத்தாள்கள், ஒரே ஆளின் கையெ ழுத்தில் உள்ளது, வெற்றி பெற்ற 65 பேர்  ஒரே மையத்தில் படித்துள்ளார்கள் என்று  குறிப்பிட்டிருந்ததாகவும், இதனால் உடனடி யாக உதவி ஆணையர் சுந்தரவதனன் மாற்  றப்பட்டதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். விருப்பு வெறுப்பின்றி நியாயமாகவும் முழுமையாகவும் மனிதநேயம், அப்போலோ பயிற்சி நிறுவனங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்துக்குட்பட்டவர்கள் தான்  என பேட்டியளிக்கும் அமைச்சர் ஜெயக் குமார், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர முன்வருவாரா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

;