tamilnadu

img

கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை,பிப்.11- தில்லி சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மதவாத அரசியலை முறியடித்து வளர்ச்சிக்  கான அரசியலே வெற்றிபெறும் என்பது இதன் மூலம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக, ட்விட்டர் பதிவில் மு.க.ஸ்டாலின் குறிப் பிட்டுள்ளார். நாட்டின் நன்மைக்காக மாநி லங்களின் விருப்பங்களும் கூட்டாட்சி முறை  உரிமைகளும் வலுப்படுத்தப்பட வேண்டும்  என்றும் திமுக தலைவர் கூறியுள்ளார்.