tamilnadu

img

பராமரிப்புத் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்துக!

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

சென்னை, பிப். 6 - மாதாந்திர பராமரிப்புத் தொகையை  ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க  வேண்டுமென்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்  றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கம்  தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறை வடைந்துள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் வியாழனன்று (பிப்.6) மனித வளையம் அமைத்து  10வது ஆண்டு விழாவை மாற்றுத்திற னாளிகள் கொண்டாடினர். இந்த விழாக்களில் கடந்த 10  ஆண்டுகளில்  சங்கத்தின் தொடர்  போராட்டத்தால், மாற்றுத்திறனாளி களுக்கென்று தனித் துறை உருவாக் கப்பட்டது, மாதாந்திர பராமரிப்புத் தொகை 500 ரூபாயிலிருந்து ஆயிரம்  ரூபாயாக உயர்த்தப்பட்டது, அந்த  ஆயிரம் ரூபாயை பெற விதிக்கப் பட்டிருந்த பொருத்தமற்ற விதிகளை 4 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி நீக்கியது. 60 விழுக்காடு ஊனம் இருந்தால்  தான் உதவித் தொகை வழங்கப்படும் என்பதை 40 விழுக்காடு என மாற்றி யது, உள்ளாட்சிகளில் போட்டியிட மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமை பெற்றது, நலத்திட்ட உதவிகளை கொடுக்க வைத்தது என அடுக்க டுக்கான சாதனைகளை  எடுத்துக் கூறினர்.

4 விழுக்காடு இடஒதுக்கீடு

இதன் ஒருபகுதியாக தென் சென்னை மாவட்டம் சார்பில், தாம்ப ரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு  மனித வளையம் அமைத்து நிகழ்வு  நடைபெற்றது. இதில் பேசிய தலைவர்கள், “ஊனமுற்றோருக்கான சட்டத்தை முறையாக அமல்படுத்த  வேண்டும், மாற்றுத் திறனாளி களுக்கான மாதாந்திர பராமரிப்புத் தொகையை 3 ஆயிரம் ரூபாயாகவும், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் தீவிர ஊனமுற்றோருக்கான உதவித் தொகையை 5 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும், தனியார்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், கல்வியிலும் 4 விழுக்காடு இடஒதுக்  கீடு வழங்க வேண்டும், 100 நாள்  வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கும் பணி வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன. இந்நிகழ்விற்கு மாவட்டத் தலை வர் ஏ.கிருஷ்ணன் தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலாளர் என்.சாந்தி,  மாநில துணைத்தலைவர் கே.பி.பாபு, மாவட்ட நிர்வாகிகள் வி.மாயவன், எம்.சரஸ்வதி, ஏ.என்.சம்பத்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

தமிழகம் முழுவதும் மனித வளையம்

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு  தமிழகம் முழுவதும் மாற்றுத்திற னாளிகள் பங்கேற்ற மனித வளையம் வியாழனன்று (பிப்.6) நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் உற்சாக மாக கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.சௌந்தரராஜன் தலை மையில் நடைபெற்ற மனித வளை யம் நிகழ்ச்சியில் மாநில பொதுச்செய லாளர் எஸ்.நம்புராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சங்கம் ஆரம்பித்து இந்த பத்தாண்டு காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு  நூறு நாள் வேலை திட்டத்தில் நான்கு  மணி நேர வேலை, முழு கூலி உட்பட  பல்வேறு கோரிக்கைகளை வென் றுள்ளதை குறிப்பிட்டார். மாநிலக்குழு உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலா ளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் பி.உமா, மாவட்ட துணைத்தலைவர் எம்.சுப்பராயன், மாவட்ட துணைச்செயலாளர் எம்.கே. முருகன் ஆகியோர் வாழ்த்திப்பேசி னர்.