வருமானம் இல்லாத மக்கள் எப்படி செலுத்த முடியும்?
திண்டுக்கல், ஜுன் 19 - மின்கட்டணத்தை கடுமையாக உயர்த்தி வசூல் செய்யும் மின்வாரி யத்தைக் கண்டித்து திண்டுக்கல்லில் முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளியன்று காலை திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக சிபிஎம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலா ளர் கே.எஸ்.சக்திவேல், ஒன்றி யக்குழு உறுப்பினர் தயாளன், திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் அஜாய்கோஷ், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலா ளர் உமாபதி ஆகியோர் பங்கேற்ற னர். இதனையடுத்து செயற்பொறி யாளருடன் கே.பாலபாரதி மற்றும் சிபிஎம் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாலபாரதி பேச்சு
முன்னதாக செய்தியாளர்களிடம் கே.பாலபாரதி கூறுகையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையான பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. சமூக ஊர டங்கு அமலாகி வருகிறது. தொழி லாளர்களுக்கும், மக்களுக்கும் எந்த விதமான வாழ்வாதாரமும் இல்லை. வேலை வாய்ப்பும் இல்லாமல் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு மின்கட்ட ணத்தை கடுமையாக உயர்த்தி வசூ லித்து வருகிறது. 4 மாதங்கள் வரை மொத்தமாக கட்டணம் வசூ லிக்கப்படுகிறது. ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மக்கள் செலுத்த வேண்டியுள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பு மக்கள் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெற்று வந்த னர். 4 மாதத்திற்கான மின் கட்ட ணத்தை மொத்தமாக வசூலிக்கும் போது 500 யூனிட் மின்சாரம் வரை பயன்பாட்டுக்கு பணம் கட்ட வேண்டி யுள்ளது. இதன் மூலம் மக்கள் இலவச மாக பயன்படுத்தி வந்த 100 யூனிட் மின்சாரத்திற்கான சலுகை கிடைக்கா மல் போய்விடுகிறது. சாதாரண காலங்களில் 100 யூனிட் மின்சாரம் பெற்று வந்த தமிழக மக்களுக்கு நெருக்கடி மிகுந்த இந்த கொரோனா காலத்தில் கிடைக்காமல் போகிறது. அரசு கொரோனா கால நிவாரணமாக ரூ.1000 கொடுத்துவிட்டு மின்கட்டண மாக ரூ.10 ஆயிரம் வரை வசூலிப்பது, நிவாரணம் கொடுத்ததற்கு அர்த்த மில்லாமல் போய்விடுகிறது. எனவே கொரோனா காலத்தில் அரசு மின் கட்டணச் சலுகை வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் மின்கட்ட ணத்தை ஏற்றுக்கொண்டு அரசே செலுத்த வேண்டும். அல்லது இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
(நநி)