சென்னை, ஏப். 1- தொழிலாளர்கள் மாணவர்களிடம் வீட்டுவாடகை கேட்டால் உரிமை யாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:- கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேளாண் செயல்பாடுகள், உற்பத்தி, உபகரணங்கள் கொண்டு செல்வது ஆகியவற்றுக்கு மத்திய அரசு விலக்களித்து ஆணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இடம் பெயர்ந்து வந்துள்ள மக்களின் பொருளாதார தேவைகளை அறிந்து உதவும் வகையில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, இடம் மாறி வந்தவர்கள், ஏழைகள், தேவைகள் உள்ள மக்களுக்கு தற்காலிக தங்குமிடம், உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று புறப்பட்டு வந்த வர்களை சுகாதாரத் துறையின் உத்தரவின்படி 14 நாட்கள் உடல் பரி சோதனை செய்து மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அருகில் உள்ள இடங்களில் தங்கச் செய்ய வேண்டும். இந்த காலகட்டத்தில் கடை உரிமையாளர், வணிக வளாக உரிமை யாளர்கள், தொழிற்சாலைகள் தங்களின் ஊழியர்களுக்கு எந்தப் பிடித்தமும் இல்லாமல் சம்பளத்தை உரிய காலத்தில் செலுத்தி னார்களா? என்பது உறுதி செய்ய வேண்டும்.
இடம் மாறி வந்தவர்கள் என்றாலும் மற்ற பணியாளர்கள் என்றா லும், வாடகை வீட்டில் இருந்தால் அவர்களிடம் ஒரு மாதத்துக்கான வாடகையை வீட்டு உரிமையாளர் கேட்கக் கூடாது. அப்படிப்பட்ட பணியாளர்களையோ, மாணவர்களையோ வாடகை கேட்டு வற்புறுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.