tamilnadu

img

கோதுமை மாவு, பிஸ்கட் வீடுகளுக்கே விநியோகம்

சென்னை, ஏப்.5- ஆசிர்வாத் கோதுமை மாவு மற்றும் பல்வேறு வகையான பிஸ்கட்டுகள்,சமையல் எண்ணை தயாரிக்கும் ஐடிசி நிறுவனம் தனது பொருட்களை மக்களின் வீடுகளுக்கே நேரடியாக விநியோகம் செய்கிறது.

இதற்காக இந்த நிறுவனம்  டாமினோஸ் பீஸா நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. பீஸா விநியோகிக்கும் இளைஞர்கள் ஐடிசி தயாரிப்புகளையும் விநியோகம் செய்வார்கள். கோவிட் 19 தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோதுமைமாவு, சமையல் எண்ணை, பிஸ்கட், மிளகாய்தூள்,தனியா தூள் உள்பட பல அத்தியாவசிய பொருட்கள் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்யப்படும் என்று அந் நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

 இந்த சேவையைப் பெற, வாடிக்கையாளர்கள் டாமி னோஸ் ஆப்பின்  சமீபத்திய பதிப்பை பயன்படுத்த வேண்டும் மற்றும் “டாமினாஸ் எசென்ஷியல்ஸ்”  பிரிவின் மீது கிளிக் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

;