கோவை, ஜூலை 29 - கொரோனா காலத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு நயவஞ்சகமாக அவரச சட்டங் களை இயற்றி வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டினார். இதுகுறித்து கோவை யில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசுகையில், ஜனவரி துவக்கத்திலேயே கொரோனா வைரஸ் இருப்பது கண்ட றியப்பட்டது. ஆனால் மார்ச் மாதம் வரை எந்த ஒரு நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்க வில்லை. தற்போது ஊரடங்கு நடைமு றையில் உள்ளது. அது எப்போது முடியும் என முதல்வருக்கே தெரியவில்லை. கடவுளுக்கு தான் தெரியும் என்கிறார். பிரதமர் மோடி கொரோனா கட்டுக்குள் உள்ளது என்கி றார். ஆனால், தொடர்ந்து ஊரடங்கு நீடிக்கி றது. இதனால் மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக அரசு ரூ.1000 நிவாரண நிதியுடன் நிறுத்திக் கொண் டது. மத்திய அரசு அதுவும்கூட செய்ய வில்லை.
ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் நீக்கப்படக் கூடாது என்கிற அறிவிப்பு வெறும் அறிவிப்பு தான். நடைமுறையில் அப்படி இல்லை. ஊரடங்கால் அமைப்பு சாரா தொழிலாளர்கள், அமைப்புசார் தொழி லாளர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய அரசு கொரோனா காலத்தைப் பயன்படுத்தி நயவஞ்சகமாக அவரச சட்டங் களை இயற்றி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மின்சார சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள் ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தெரு விளக்கு போன்றவை மின்சாரத்துறை பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால் தான் கிடைக்கிறது. எனவே, இந்த மின்சார வரைவு மசோதா நிறைவேற்றப்படக் கூடாது, நிராகரிக்க வேண்டும் என்றார். மேலும், வேளாண் சட்டத்தில் மாற்றம் என அவசர சட்டங்கள் இயற்றப்பட உள்ளன. வேளாண் சட்டத்தில் தனியார் வர்த்தக நிறுவ னங்களுக்கு மத்திய அரசு பல சலுகை களை வழங்க உள்ளது. சுற்றுச்சூழல் சட்டத் தில் மாற்றம். அதில் தொழிற்சாலைகள் அமைக்க மக்களிடம் அனுமதி கேட்க வேண்டாம் என்கிற நிலை உள்ளது. இத் தகைய சூழலில் ஒ.பி.சி பிரிவினர் மருத்துவ படிப்பு விவகாரம் தொடர்பாக இடஒ துக்கீட்டுக்கு வழக்கில் உயர் நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் பா.ஜ.க இதில் இரட்டை வேடம் போடுகிறது. மக்கள் இதனை அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.
சமீபமாக முகநூலில் அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுப்படுத்தும் செயல் நடந்து வருகிறது. கம்யூனிஸ்ட் தலைவரை யும் முகநூலில் இழிவுப்படுத்தி வருகி றார்கள். இவை குறித்து கடந்த 17 ஆம் தேதி சென்னை மாநகர காவல் துறை ஆணையர் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள காவல்நி லையங்களில் ஆயிரக்கணக்கான மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. முகநூலில் தலைவர்கள் இழிவுபடுத்தப்படுவது தொடர் பாக ஆளும் அதிமுக கட்சி கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. இதன் மீது நடவடிக்கை இல்லை என்றால் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக் கும். ஜனநாயகத்தில் மிக முக்கியமான தூண் பத்திரிகை. தற்போது பத்திரிகைகள், பத்திரி கையாளர்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு வரு கின்றனர். நாட்டில் பாசிச ஆட்சி நடக் கும் நிலையில் அதற்கு எடப்பாடி அரசு துணை போகிறது. தனிமனித இடைவெளி யுடன் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதிக்க வேண்டும். மக்களுக்கு எதிராக நடக்கும் திட்டங்கள் குறித்த போராட அனுமதிக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக யாரும் கருத்து சொல்ல முடியவில்லை. அப்படி சொன்னால் அவர்கள் அவர்களது குடும்பங்கள் மிரட்டப்படுகின்றனர். இவ்வாறு இரா.முத்தரசன் கூறினார். இந்த பேட்டியின் போது சிபிஐ மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட செய லாளர் வி.எஸ்.சுந்தரம் ஆகியோர் உடனிருந்த னர்.