சென்னை,டிச.17- குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து சென்னை பல்கலை க்கழக மாணவர்கள் செவ்வாயன்று இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்நிலையில் பல்கலைக் கழக நிர்வாகம் திடீ ரென்று விடுமுறை அறிவித்து, போராட்டத்தை முடக்க முயற்சி மேற்கொண் டுள்ளது. குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து இந்தியா முழு வதும் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வரு கின்றனர். சென்னை பல் கலைக்கழகத்தில் மாண வர்கள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை யடுத்து சென்னை பல்கலை க்கழகத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. டிசம்பர் 23 வரை வகுப்புகள், தேர்வு கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகிறது என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை கெடுபிடி
பல்கலைக்கழக வளா கத்திற்குள் மாணவர்கள் போராட்டம் நடத்துவதால் போராட்டத்தை முடித்துக்கொள்ளு மாறு காவல்துறையினர் கெடுபிடி செய்து வரு கின்றனர். இந்த போராட்டத் தில் இணைந்துகொள்ள சென்னை மாநகரின் பல பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவர்கள் செவ்வாயன்று கடற்கரை காமராஜர் சாலை யில் வந்தபோது ஆங்கா ங்கே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இருப்பினும் செவ்வாயன்று இரவிலும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதனை சுற்றி ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்ட னர்.
நாடு முழுவதும்...
தலைநகர் தில்லியில் செவ்வாயன்று நடைபெற்ற போராட்டத்தில் 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சீலம்பூர் பகுதியில் போராட்ட க்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி னர். வெல்கம், ஜஃப்ராபாத், மவுஜ்பூர்- பாபர்பூர், சீலாம்பூர் உள்ளிட்ட மெட் ரோ நிலையங்கள் மூடப்பட்டன.
தொடர் போராட்டத்தில் சென்னை பல்கலை. மாணவர்கள்.