விழுப்புரம், ஏப்.26- விழுப்புரம் நகராட்சி பகுதியில் அதியா வசியப் பொருட்கள் வாங்க வண்ண அட்டைகள் வழங்கப்பட்டு நடைமுறை யில் இருந்து வந்தது. இந்நிலையில், காய்கறி மொத்த விற்ப னையாளர்கள் மற்றும் மளிகைக்கடை மொத்த விற்பனையாளர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் இயங்குவது என முடிவெடுத்து நடைமுறைப் படுத்தினர். இதனால், பொதுமக்கள் சமூக இடை வெளியைக் கடைப்பிடிக்காமல் கடைக ளுக்குப் படையெடுத்ததால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை யினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’வாரத் திற்கு 3 நாட்கள் என்ற நடைமுறை கரோனா சமூகப் பரவலைத் தடுப்பதற்கு உகந்த தாக இல்லை என தெரிய வந்துள்ளது.
எனது, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த வண்ண அட்டைகள் முறையே சரியாக இருக்கும் என்பதால் அதனையே பின்பற்ற மொத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
’வண்ண அட்டை நடைமுறையை மொத்த வியாபாரிகள் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் வார்டு வாரியாக வழங்கப் பட்டுள்ள வண்ண அட்டைகளைப் பயன் படுத்தி விழுப்புரம் நகர மக்கள் வீட்டிற்கு ஒரு நபர் மட்டும் வீட்டை விட்டு வெளியே சென்று அத்தியாவசியப் பொருட்கள், மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.