tamilnadu

img

சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவி மாவட்ட அளவில் சிறப்பிடம்

சிதம்பரம், ஜூலை 18- சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 வகுப்பில் பயின்ற மாணவி பிரியஹரிணி 600க்கு 589 மதிப்பெண் பெற்று  மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை  படைத்துள்ளார். மேலும் வெற்றிச்செல்வன், சிவசேகரன் ஆகிய இரண்டு மாணவர்கள் 557 மதிப்பெண்  கள் பெற்று அடுத்த இடத்தை பிடித்தனர். பள்ளியின் தாளாளர் வீனஸ்குமார், பள்ளியின் முதல்வர் ரூபியாள்ராணி, துணை  முதல்வர் அறிவழகன் ஆகியோர் சாதனை படைத்த மாணவர்களுக்கு  வாழ்த்து தெரி வித்து, சுழல் கோப்பை மற்றும் ரொக்க பரிசு  வழங்கினர்.  பள்ளியில்  தேர்வு எழுதிய 235  மாணவர்களில் 234 மாணவர்கள் தேர்ச்சி  பெற்றுள்ளனர். மேலும் 550 மதிப்பெண்க ளுக்கு மேல் 3 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல்13 மாணவர்களும் பெற்றுள்ளனர்.