tamilnadu

img

மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச.16- வெப்பச் சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத் துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் மணல்மேடு, திரு வாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் நன்னிலம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் தலா 1 செ. மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும் தெரி வித்துள்ளனர்.

;