மின்வாரியத் தலைவர் பதிலளிக்க உத்தரவு
மதுரை, மார்ச் 2- மின்வாரிய பணித்தேர்வை தமிழில் நடத்தக் கோரிய வழக்கில் மின்வாரிய தலை வர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. மதுரையைச் சேர்ந்த சாந்தி, உள்ளிட்ட பலர் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில்,” தமிழ்நாடு மின்வாரியத்தில் இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதற் காக விண்ணப்பித்துள்ளோம். மின்வாரிய பணிக்கு ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படு கின்றனர். முன்பு கேள்விகளும், அதற்கான பதில் களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்தன. தற்போது வெளியிடப்பட்ட அறி விப்பாணையில் ஆன்லைன் தேர்வில் வினாக்களும், அதற்கான பதில்களும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். தமிழ் தொடர்பான கேள்விகள் மட்டுமே தமிழில் இருக்கும் என அறிவிப்பாணையில் கூறப் பட்டுள்ளது.
ஆனால் கேள்வி, பதில்கள் ஆங்கி லத்தில் மட்டும் இருப்பதால் அதைப் புரிந்து பதிலளிப்பதில் சிரமம் ஏற்படும் நிலை யுள்ளது. இதனால் கிராமப்புறங்களைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு சிரமம் ஏற்படும். எனவே மின்வாரிய அறிவிப்பா ணையில் ஆன்லைன் கேள்விகள் மற்றும் பதில்கள் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும் என்ற பிரிவை செல்லாது என அறிவித்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்க உத்த ரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தனர். இந்த மனுவை திங்களன்று விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் இது குறித்து தமிழ் நாடு மின்வாரியத் தலைவர், மேலாண்மை இயக்குநர், தலைமைப் பொறியாளர் பதி லளிக்க உத்தரவிட்டு வழக்கு விசார ணையை மார்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத் தார்.