சென்னை, ஏப்.17- தமிழ்நாட்டில், வங்கிகள் அனைத்தும் மே 3 ஆம் தேதி வரை பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும். கொரோனா வைரஸ் அச்சு றுத்தல் காரணமாக, கடந்த மாதம் 23 ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள வங்கிக்கிளைகளின் பணி நேரத்தை குறைக்குமாறு அதி காரிகள் கேட்டுக் கொண்டனர்.
காலை 10 மணி முதல் பிற்ப கல் 2 மணிவரை மட்டும், பொது மக்களுக்காக திறந்து வைத்தி ருக்குமாறு வலியுறுத்தினர். அதன்படி, வங்கிகள் செயல்பட்டு வந்தன. இதற்கிடையே, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய அரசு நிவாரண தொகை அறிவித்தது. ஜன்தன் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.500 போடப் பட்டது. வழக்கமான மாதாந்திர ஓய்வூதிய தொகையும் செலுத் தப்பட்டது.
இத்தகைய பரிமாற்ற தேவை களுக்காக, வங்கிகள் முழு நேரம் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதை ஏற்று, கடந்த சில நாட்க ளாக வங்கிகள் மாலை 4 மணி வரை இயங்கின. இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், வங்கிகள் மீண்டும் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அளவி லான வங்கி நிர்வாகிகள் குழு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
வங்கிக் கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கும் பணி முடிந்து விட்டது. அதை பொது மக்கள் படிப்படியாக எடுத்து வரு கிறார்கள். மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால், மக்கள் பிற்ப கல் 1 மணிக்குள் வங்கி பரிமாற்றங் களை முடித்து விடுகிறார்கள்.
எனவே, மே 3 ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மட்டும் செயல்பட வேண்டும். ஊழியர்களின் இருப்பை பொறுத்து, சுழற்சி முறையில் 50 சதவீத ஊழியர்களு டன் செயல் படலாம். ஒரே பகுதியில் ஒரு வங்கியின் இரண்டு கிளைகள் இருந்தால், மாவட்ட அதிகாரி களுடன் ஆலொசித்து, ஏதேனும் ஒரு கிளை மட்டும் செயல்பட வேண்டும். அத்துடன், வங்கி களுக்கு நேரில் வராமல், மின் னணு பண பரிமாற்றத்தில் ஈடுபடு மாறு வாடிக்கையா ளர்களிடம் வங்கிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.