tamilnadu

மனித வாழ்வை சீரழிக்கும் புகையிலையை தடை செய்திடுக!

வியாபாரத் தொழில்துறை சங்கம் வலியுறுத்தல்

விருதுநகர், மே 15- மனித வாழ்வில் கேடு விளை விக்கும் புகையிலையை நாடு முழுவதும் பயிரிடுவதை தடை செய்ய வேண்டுமென விருது நகர் வியாபாரத் தொழில்துறை சங்கத்தினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.  இதுகுறித்து மனுவில், புகை யிலை என்பது கால்நடைகளும், மனிதர்களும் பயன்படுத்தும் உணவுப் பொருள் அல்ல. இதைப் பயன்படுத்தி சிகரெட், பீடி, குட்கா போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தும் மனிதர்களின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப் படுகிறது. குறிப்பாக புற்று நோய் உடலில் பரவி உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால், ஏரா ளமான குடும்பத்தினர் பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனர்.  எனவே, நாடு முழுவதும் புகையிலைச் செடிகள் பயிரிடு வதை தடை செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக நெல், கரும்பு, கோதுமை மற்றும் மானாவாரிப் பயிர்களான பயறு வகைகளை விவசாயிகள் பயிரிட ஊக்க மளிக்க வேண்டும் என தெரி வித்துள்ளனர்.

;