சென்னை எர்ணாவூர் ஆல் இந்தியா ரேடியோ நகர குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 100 கூலித் தொழிலாளர்களுக்கு எண்ணூர் அனல் மின் நிலைய ஊழியர்கள் தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை வடக்கு பொது கட்டுமானம் ஐசிசி சார்பாக தலா 5 கிலோ வீதம் அரிசி, கோதுமை மாவு மூட்டைகள் வழங்கப்பட்டன. சங்க நிர்வாகி வெங்கட்டையா தலைமையில் முன்னாள் நகரமன்றத் தலைவர் ஆர். ஜெயராமன், மாதர் சங்கம் மாவட்டச் செயலாளர் பாக்யம், பகுதிச் செயலாளர் கதிர்வேல், வடக்கு மண்டல செயலாளர் ரவிக்குமார், வடக்கு செயலாளர் சத்யா, ஜிசிசி செயலாளர் முத்து, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுற்று வட்டார கூலி தொழிலாளிகளுக்கு ஊரடங்கும் முடியும் வரை உதவி செய்ய உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.