tamilnadu

img

சென்னையில் 506 விமானங்கள் ரத்து

சென்னை, மார்ச் 25- சென்னை விமான நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு இயக்கப்பட்ட 506 பயணிகள் விமான சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் வருவதை தடுக்கும் வகை யில் நாடு முழுவதும் விமான சேவைக்கு கடந்த 22ம்  தேதியில் இருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால்  57 விமானங்கள் ரத்தானது.

அதேபோல் உள்நாட்டு விமான சேவைகளுக்கும்  தடைவிதிக்கப்பட்டுள்ளது இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவை முற்றி லும் முடங்கியது. சென்னையிலிருந்து புறப்படும் 196  விமானங்கள் வெளியிலிருந்து வரும் 196 விமானங்கள்  என மொத்தம் 302 விமான சேவைகள் ஒட்டுமொத்த மாக ரத்து செய்யப்பட்டுள்ளன இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு இயக்கப்பட்ட 506 பயணிகள் விமான சேவைகள் முழு மையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில் சென்னை பழைய விமான நிலை யத்தில் இருந்து சரக்கு விமானங்கள் இயக்கப்படு கின்றன.

;