tamilnadu

img

ரயிலில் டிக்கெட் எடுக்காத 23 ஆயிரம் பேருக்கு அபராதம்

சென்னை,ஜன.17- பொங்கல் பண்டிகை தினத்தில் டிக்கெட் எடுக்காமல் மின்சார ரயில்களிலும், எக்ஸ்பி ரஸ் ரயில்களிலும்பயணம் செய்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மின்சார ரயில்களில் டிக்கெட் எடுக்கா மல் பயணம் செய்து டிக்கெட் பரிசோதகரி டம் பிடிபட்டு அபராதம் செலுத்தும் சம்பவம்  சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணம் செய்வோர்  அதிகரித்து வருகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் டிக்கெட் எடுக்காமல் மின்சார ரயில்களிலும், எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஓசிப் பயணம் செய்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னை டிவிசனுக்குட்பட்ட பகுதியில் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனை யில் கடந்த 14 ஆம் தேதி மட்டும் 2,329 பேர்  டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்து  பிடிபட்டனர். இதன் மூலம் ரூ.8 லட்சத்து 89 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள் ளது. இதுவரை ஓசிப் பயணம் செய்து பிடிபட்டோரின் எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும். 13 ஆம் தேதி 2,281 பேர் பயணம் செய்து பிடிபட்டுள்ளனர். மின்சார ரயிலில்தான் அதிகம் பேர் டிக்கெட் எடுக்கா மல் பயணம் செய்து அபராதம் செலுத்தி உள்ளனர். முன்பதிவு செய்யப்படாத பயண டிக்கெட்டை வைத்து ரிசர்வேஷன் பெட்டி யில் பயணம் செய்து பிடிபட்டதால் மூன்றில்  ஒரு பங்கு அபராதம் மூலம் வருவாய் கிடைத்துள்ளது. இதுகுறித்து ரயில்வே வணிகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மின்சார ரயில்களில் திடீர் திடீரென டிக்கெட் பரிசோதனை நடத்தப்படும். பண்டிகை காலங்களில் சிலர் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து பிடிபடுகிறார்கள். பொதுவாக முன்பதிவு செய்யப்படாத பயண டிக்கெட் மூலம் ரிசர்வேஷன் பெட்டி களில் பயணம் செய்து பிடிபடுவோர்கள்தான் அதிகம். பண்டிகை நேரத்தில்தான் அதிக  அளவு பயணம் செய்கிறார்கள். கூட்ட நெரி சலை பயன்படுத்தி டிக்கெட் எடுக்காமல் அதிகளவு பயணிக்கிறார்கள்.

இந்த ஆண்டு பொங்கல், தீபாவளி  பண்டிகையின் போதுதான் அதிகளவு பய ணம் செய்துள்ளனர். சென்னையிலிருந்து இரவில் புறப்படுகிற 10 ரயில்களில் முன்பதிவு  செய்யப்படாத பெட்டிகளில் 3 ஆயிரம் பேர்  பயணம் செய்ய முடியும். ஆனால் அதை விட அதிகளவு முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் விற்பனை ஆகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னை கோட்டத்தில் கடந்த ஆண்டு  டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து அப ராதம் விதிக்கப்பட்ட விவரம் வருமாறு:-  ஆகஸ்டு மாதம் 34,486 பேரும், அக்டோபர்  மாதம் 44,166 பேரும், டிசம்பர் மாதம் 38,345  பேரும், ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வரை யில் 23, 290 பேரும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து அபராதத் தொகை செலுத்தி  உள்ளனர்.

;