tamilnadu

img

2 கோடியை தாண்டிய கையெழுத்து: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திருவள்ளூர், பிப்.8-  குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவள்ளூரில் சனிக்கிழமையன்று (பிப்.8) கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களிடம் கையெழுத்து பெற்றார். இந்த நிகழ்ச்சியின்போது உரையாற்றிய ஸ்டாலின்,“படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை தேடி அலைந்து கொண்டிருக் கிறார்கள். வேலை இல்லா திண்டாட்டத்தை பற்றி மக்கள் பேச துவங்கி விட்டனர். இதை  திசை திருப்பவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு  கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்களை கண்டித்து தோழமைக் கட்சிகள் ஒருங் கிணைந்து குரல் கொடுத்து வருகிறோம்”என்றார். இந்திய அரசியல் சட்டத்தைப் பற்றி விமர்சிக்கக்கூடிய கேவலமான நிலைக்கு நாடு சென்றுக்  கொம்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, மறியல் என பல பேராட்டங்கள் நடத்தி தற்போது  கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறோம். இம் மாதம் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து கையெழுத்து பெற்றுள்ளோம். இந்த படிவங்களை ஒன்று சேர்த்து குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க உள்ளோம்.  ஒரு கோடி கையெழுத்து பெறுவதாகதான் முடிவு செய்தோம. ஆனால், மக்கள் தானாக முன்வந்து  கையெழுத்துதிட்டு 2 கோடியை தாண்டி விட்டது. இந்த கையெழுத்து இயக்கத்தை ஒரு சிலர் கேலி, கிண்டல் செய்து தடை செய்ய வேண்டும் பேசி வருவதையும் என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.