tamilnadu

img

ஆசிய நாணயங்களில் படு வீழ்ச்சி அடைந்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு

இந்திய ரூபாய் மதிப்பு, மற்ற ஆசிய நாணயங்களை விட படு வீழ்ச்சி கண்டுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய பொருளாதார வளர்ச்சியில் உள்ள தொடர் வீழ்ச்சி மற்றும் பணவீக்கத்தின் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்தியா ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது. கடந்த 2019-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ரூபாயின் மதிப்பானது, அமெரிக்கா டாலருக்கு எதிராக கிட்டத்தட்ட 2% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே தாய்லாந்து நாட்டு கரன்சியான தாய் பாத் 6.3% எழுச்சி கண்டுள்ளது. இதே மலேசியாவின் கரன்சியான ரிங்கிட் 1.5% ஏற்றமும், பிலிப்பைன்ஸ் கரன்சியான பெசோ 3% எழுச்சியும் கண்ட இந்த காலத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 2% வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான சீனாவின் ரென்மின்பி 0.4% டாலருக்கு எதிராக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்திய ரூபாயின் மதிப்புடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் படு மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் எதிர்பார்த்ததை விட ஏற்பட்ட கூர்மையான வீழ்ச்சியே இதற்கு காரணம் என்றும் பொருளாதார நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
 

;