புதுதில்லி, ஜுன் 10- 2020-21 நிதியாண்டில் அடுத்த தவணை யாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடு விக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரி வித்துள்ளார்.
15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,157 கோடி விடு விக்கப்பட்டுள்ளது. அதில் 2020-21 நிதி யாண்டில் அடுத்த தவணையாக தமிழக த்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப் பட்டுள்ளது என்றும், கொரோனா நெருக் கடி சூழலில் கூடுதல் நிதி ஆதாரமாக பயனளிக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான உத்தரவு புதனன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.