tamilnadu

img

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகைப்படுத்தப்பட்டுள்ளது - அரவிந்த் சுப்பிரமணியன்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 2011-12 ஆண்டு முதல் 2016-17 ஆண்டு வரையில் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளதாக முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

இது குறித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரவிந்த் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில், கடந்த 2011-12 ஆண்டு முதல் 2016-17 ஆண்டு வரையிலான பொருளாதார வளர்ச்சியானது 7% என்று இந்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இந்த வளர்ச்சி வெறும் 4.5% மட்டுமே என்றும், இந்த பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடு மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். 

பொருளாதார வளர்ச்சி கணக்கீட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் மின் உற்பத்தி, இரு சக்கர வாகன விற்பனை, ஐஐபி (IIP - Index of Industrial Production) உள்ளிட்ட 17 தரவுகள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. இதுவே மிகைப்படுத்தப்பட்ட கணிப்புக்கு காரணம் ஆகும். 

முன்னதாக, 2004-05 ஆண்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி, தற்போது 2011-12 ஆம் ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்டிருப்பது சரியானது அல்ல என்று தெரிவித்துள்ளார். அவர் 2011-12 மற்றும் 2016-17 இடையேயான காலகட்டத்தை மட்டும் வைத்து நாட்டின் மொத்த வளர்ச்சியை கணக்கிட இயலாது என்று கூறியுள்ள அவர், துல்லியமற்ற புள்ளிவிவரங்களைக் வைத்து வளர்ச்சியைக் கணக்கிடுவது சீர்திருத்தங்களின் உத்வேகத்தைக் குறைத்துவிடக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார். 

இந்த கட்டுரையில், வேலையின்மை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, அதனைக் கணக்கில் கொண்டால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதம் மட்டுமே இருக்கும் குறிப்பிட்டுள்ளார். உற்பத்தி துறையில் வளர்ச்சி எதிர்பார்ப்பை விட அதிகமாக 15% -17% வரை இருப்பதாகவும் கூறியிருக்கிறார். 

மேலும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, தேசிய வருவாய் கணக்குகள் பற்றிய கணிப்புகளை மீள்பார்வை செய்து மற்றும் ஜிஎஸ்டி மூலம் ஏற்பட்டுள்ள புதிய வாய்ப்புகளை கண்டறிவதன் மூலம் அதனை மேம்படுத்துவது ஆகிய இரண்டு முக்கிய விஷயங்களைக் கருத்தில் கொண்டு கொள்கைகளை முடிவுகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  புதிய அரசின் உடனடி முக்கியத்துவம் நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுப்பதற்குத் தரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 
 

;