tamilnadu

img

ரஷ்ய ஜனாதிபதி புதின் -வடகொரிய ஜனாதிபதி கிம்ஜாங் உன் இடையே பேச்சு வார்த்தை

ரஷ்யாவில் ரஷ்ய ஜனாதிபதி புதின்,வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.


ரஷ்ய நாட்டின் விளாடிவோஸ்டாக் நகரின் ரஸ்கி தீவில் உள்ள ஈஸ்ட் ஃபெடரல் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்தும், அணு ஆயுத பயன்பாடுகள் குறித்தும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன், கிம் ஜாங் உன்-ம் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

பேச்சுவார்த்தை நிறைவடைந்ததைத்தொடர்ந்து இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, புதினுடனான முதல் சந்திப்பு, மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருப்பதாக கிம் ஜாங் உன் தெரிவித்தார். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சனை முற்றாக முடிவுக்கு கொண்டுவர, ரஷ்யா உதவும் என விளாடிமிர் புதின் உறுதி அளித்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் 2 மாதங்களுக்கு முன்பு, எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிந்தது. இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடனான, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.


;