tamilnadu

img

பிரிட்டன் பாராளுமன்றத்திற்குள் நரி

லண்டன்
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்த பிரிட்டன் அமைப்பின் பாராளுமன்றம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் அமைந்துள்ளது.  

இந்த பாராளுமன்றத்தின் அலுவலக பகுதியான போர்ட்கல்லிஸ் ஹவுஸ் கட்டிடத்தின் எஸ்கலேட்டர் வழியாக ஞாயிறன்று மாலை நரி ஒன்று நுழைந்து. நான்காவது மாடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களின் பிரதான கட்டிடத்திற்குள் நுழைந்து அந்த பகுதியை ஒரு கலக்கு கலக்கிவிட்டது. நரியைக் கண்ட போலீசார் அதனை பிடிக்க பல்வேறு வகையில் முயன்றனர். ஆனால் நரி தொடக்கம் முதலே போலீசாருக்கு போக்கு காட்டியது. கடுமையான போராட்டத்துக்கு பின் போலீசார் நரியை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். 

போலீசார் கண்காணிப்பில் இருந்தும் பாராளுமன்ற அலுவலகத்திற்குள் நரி நுழைந்த சம்பவம் லண்டன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

;