tamilnadu

img

பிரேசிலில் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது....

ரியோ 
தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள மிகப்பெரிய நாடான பிரேசிலில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் அந்நாட்டில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஒருநாளில் சராசரியாக 6000 பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 1000 பேர் இறக்கின்றனர்.  

இந்நிலையில் கடந்த 12 மணிநேரத்தில் மட்டும் பிரேசிலில் ஆயிரத்து 807 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 87 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் அதே காலகட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவை வென்று வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாகப் பிரேசிலின் கிழக்கு கடற்கரை பகுதிகள் கொரோனாவால் உருக்குலைந்துள்ளன. 

இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் கடந்த 20 நாட்களில் மட்டுமே பிரேசிலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.       
 

;