tamilnadu

img

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பூனை மலைப்பாதை கண்டுபிடிப்பு 

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பூனை மலைப்பாதையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தெற்கு அமெரிக்க நாடுகளில் ஒன்றான, பழங்குடி நாகரீகத்தில் சிறந்து விளங்கும் நாடாக உள்ளது. மச்சு பிச்சு போன்ற உலகின் பாரம்பரிய சின்னங்களை கொண்ட நாடாக உள்ளது. இதெற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பூனை வடிவிலான மலைப்பாதை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். லிமாவுக்கு தெற்கே அமைந்த நாஸ்கா  பாலைவனம் அமைந்துள்ளது. இதில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மிகப் பெரிய பூனை வடிவிலான மலைப்பாதையை கண்டுபிடித்துள்ளனர். இது 120 அடி நீளமாக உள்ளது. இது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருக்கும் என பெரு நாட்டின் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே இப்படியொடு பூனை மலைப் பாதையை அந்நாட்டு மக்கள் உருவாக்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.