tamilnadu

img

கொரோனாவுக்கு இங்கிலாந்து நடிகை பலி 

லண்டன்
ஐரோப்பா கண்டத்தில் கொரோனா வைரஸுக்கு இரையான நாடுகளில் பிரிட்டன் அமைப்பின் தலைநகராகக் கருதப்படும் இங்கிலாந்தும் ஒன்று. அங்குக் கடந்த 2 நாட்களாக கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டிலிருந்தாலும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு 900-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி பிரிட்டனில் 70,000-க்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8900-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு சாதாரண வார்டுக்கு  மாற்றப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பழம்பெரும் நடிகையான ஹிலாரி (74) கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பொழுதிலும்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகன் அலெக்ஸ் வில்லியம்ஸ் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

;