சென்னை
தமிழக மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் ஜூலை மாத தொடக்கத்திலிருந்து மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
குறிப்பாக கடந்த ஒருவார காலமாக தினசரி பாதிப்பு 4 ஆயிரத்துக்கு மேல் தான் உள்ளது. நேற்று (புதன்) முதன்முறையாக மாநிலத்தின் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று (வியாழன்) புதிய உச்சமாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 1,92,964 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 88 பேர் பலியாகியுள்ள நிலையில், மாநிலத்தின் மொத்த கொரோனா உயிரிழப்பு 3,232 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 5,210 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,763 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 52 ஆயிரத்து 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றைய கொரோனா பாதிப்பில் 49 பேர் மாநிலத்தின் வெளிப்பகுதியில் இருந்து வந்தவர்கள்.
பரிசோதனை விபரம்:
கொரோனா அறிகுறியுடன் வந்த 60,112 மாதிரிகளில் 60,375 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பரிசோதனைக்கு பிறகு 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை. பழையபடி 113 ஆக தான் உள்ளது.