tamilnadu

img

சிறை - நீதிமன்றம் காணொலி காட்சி விசாரணை

கேரள முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார்

திருவனந்தபுரம், ஜன.10- கேரளத்தில் உள்ள சிறைகளையும் நீதிமன்றங்க ளையும் தொடர்பு படுத்தும் காணொலி காட்சி செயல் பாட்டை (வீடியோ கான்பரன் சிங்) முதல்வர் பிரனாயி விஜயன் வெள்ளியன்று துவக்கி வைத்தார். கேரள உயர்நீதிமன்றத் தில் நடந்த இந்த நிகழ்ச்சி க்கு பினராயி விஜயன் தலைமை வகித்தார். அப் போது அவர் பேசியதாவது: பல்வேறு துறைகளின் செயல்பாடுகளில் தொழில் நுட்பத்தை அதிகபட்ச திற மையுடன்  பயன்படுத்தும் நட வடிக்கையின் பகுதியாகும் இது. சிறைத்துறை மற்றும் காவல்துறைகளுக்கு மிக வும் பயனுள்ள திட்டமாகும் இது. கேரளத்தில் உள்ள 53 சிறைகளையும், 372 நீதிமன்றங்களையும் 87 ஸ்டுடியோக்கள் மூலம் இணைத்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திறந்தவெளி சிறைகளை தற்போது இந்த திட்டத்தில் இணைக்கவில்லை. திரு வனந்தபுரம், கொல்லம், பத்த னம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்கள் முதல் கட்டத்தில் இணைக் கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக எர்ணாகுளம், திரிச்சூர், இடுக்கி, கோழிக் கோடு, கண்ணூர் மாவட்டங் கள் இணைக்கப்படும். 2020 மார்ச் 31க்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் இத்திட்டம் அமல் படுத்த வேண்டும் என்பது இலக்கு.

கைதிகளின் வாரண்ட், புகார் போன்றவை ஆன் லைனில் அனுப்புவதற்கான ஸ்கேனர் அமைப்பு செயல் பாட்டுக்கு வந்துள்ளது. இவற்றின் நகல்களை எளி தாக வழங்க முடியும். காவல் துறையினர் வாரண்டுகளு டன் நீதிமன்றங்களில் ஏறி இறங்குவதிலிருந்தும், காத்து நிற்பதிலிருந்தும் ஏற்படும் காலவிரயத்தை தவிர்க்கலாம். கைதிகளை மின்னணு இயந்திரத்தின் முன்பு ஆஜர்படுத்தி காவலை நீட்டிக்கலாம். விசார ணையும் ஆன்லைனில் நடத்துவது குறித்து பரி சீலனையில் உள்ளது என முதல்வர் கூறினார்.             காவல்துறையினரை பொறுத்தவரை புரட்சிகர மான மாற்றமாகும் இது. 600 முதல் 800 காவல்துறையினர் தினமும் மாநிலம் முழுவ தும் கைதிகளுடன் காவல் பணியில் ஈடுபடுத்தப்படு கின்றனர். அவர்களது தினசரி படிக்காக கோடிக்கணக் கான ரூபாய் செலவிடப் படுகிறது. ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வழக்கு களில் ஆஜராக வேண்டிய கைதிகளை சிரமம் இல்லா மல் ஆஜர் படுத்த முடியும். நோயுற்றோர், பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளோர், தீவிரவாதிகள் போன்ற கைதிகளை வெளியே அழைத்துச் செல்வ தில் உள்ள பிரச்சனைக ளுக்கு தீர்வாக அமையும். இந்த வகை வீடியோவை பின்னர் வழக்கு தொடர் பான விசாரணைக்கு கிடைக் கச் செய்யலாம் என்றார். விழாவுக்கு உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெய ராஜன், நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர்கள், அதி காரிகள் பங்கேற்றனர். இத்திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கெல்ட்ரான் தலைமையில் பிஎஸ்என்எல், யுனைட்டெட் டெலிகாம் லிமி ட்டெட், பிபிஎல் லிங்க், மாநில ஐடி மிஷன் ஆகியோரின் ஒத்துழைப்பில் செயல்படுத் தப்படுகிறது.

;