tamilnadu

img

உணவு கிடைப்பதை உறுதி செய்ய காணொலி மூலம் வர்த்தகர்கள், தொழிலதிபர்களுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துரையாடல்

திருவனந்தபுரம், மார்ச் 24- கோவிட் 19 பரவுதலைத் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால்,  உணவு மற்றும் பிற அத்தியா வசியப் பொருட்கள் கிடைப் பதை உறுதி செய்வதற்காக முத லமைச்சர் பினராயிவிஜயன் வணிகர்கள் மற்றும் தொழிலதி பர்களின் பிரதிநிதிகளுடன் காணொலி காட்சி மூலம் விவாதம் நடத்தினார். செவ்வாயன்று நடந்த இந்த விவாதத்தில் 14 மாவட்டங் களைச் சேர்ந்த நிறுவன பிரதி நிதிகள் பங்கேற்றனர். ஏதேனும்  பாதகமான சூழ்நிலை ஏற்பட்டா லும் உணவுப் பொருள் விநியோ கத்தை உறுதிப்படுத்த தேவை யான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது என்று முதல்வர் குறிப் பிட்டார். இதில் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கை களுக்கும் முழுமையான ஒத்து ழைப்பு வழங்குவதாக அமைப்பு களின் பிரதிநிதிகள் தெரி வித்தனர். இதற்கு எந்த ஆட்சேபணை யும் இந்த துறையிலிருந்து எழ வில்லை. வணிக- தொழில் சமூகம் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. கறுப்புச் சந்தை யும், பதுக்கலும் இல்லாமல் தற்போதைய நிலைமையைப் பேண வேண்டும். மக்கள் கடை யில் வந்து பொருட்கள் வாங்கு வதில் சிரமம் ஏற்படும். அத்த கைய சூழ்நிலையில், வீட்டுக்கு சென்று பொருட்களை வழங்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு பகுதியிலும் விற்பனையாளர் களைக் கொண்ட ஒரு உள்ளூர் பொது அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

ஆன்லைன் அல்லது வாட்ஸ்அப் மூலம் வீட்டு  ஆர்டர்களை ஏற்று அதற்கேற்ப பொருட்களை வீடுகளில் வழங்கும் முறையை பின்பற்ற வேண்டும். அண்டை  மாநி லங்களிலிருந்து சரக்குகளை கொண்டுவருவதில் உள்ள தடைகள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. அதற்கு தீர்வு காண அரசு தலையிடும். அரசு  கட்டிடங்களை வாடகை எடுத்து நடத்தும் கடைதாரர்களுக்கு வாடகையில் சலுகை  அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்கும். இது வணிக அமைப்புகளின் கட்டடம் என்றால், அதை நிறு வனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை, உப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். முகமூடி, கிருமி நாசினி உள்ளிட்ட பொருட் களுக்கான விலையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதை அதிகரிக்கக் கூடாது. அத்தி யாவசிய பொருட்களின் இருப்பை வணிகர்கள் உறுதிப் படுத்த வேண்டும். குறைந்தது இரண்டு வாரங்களுக்கு தேவை யான பொருட்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

கட்டுமானப் பணிகளில் எந்த இடையூறும் ஏற்படாது. ஆனால் பொதுவான ஏற்பாடுகள் இதற்கு பொருந்தும். அண்டை மாநிலங்களிலிருந்து  லாரிகள் வருவதில் தடை ஏற்படும் சூழ்நிலையில்,  கேரளத்தில் மற்ற தேவைகளுக்காக ஓடும் லாரிகளை அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தலாம். அதற்கு நிறுவனங்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும். வெளிமாநிலத் தொழி லாளர்களுக்கு ஆரோக்கிய மான - பாதுகாப்பான தங்கு மிடம் வழங்கிட வேண்டும். அவர்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பதையும் பிற உதவிகள்  கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மாநி லங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக லாரி ஓட்டுநர்களுக்கு தங்குமிடம், உணவு போன்ற அத்தியாவசிய வசதிகள் வழங்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வீடியோ கான்பரன்ஸில் முதல்வர் அழைப்பு விடுத்தார்.

;