tamilnadu

img

பல ஆயிரம் கோடி பணமோசடியில் யெஸ் வங்கி நிறுவனர் கைது 3 நாள் அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி

மும்பை,மார்ச் 8-  பல ஆயிரம் கோடி பணமோசடி வழக்கில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டுள் ளார். அதிகளவில் கடன் வாங்கிய யெஸ் வங்கி,  மூலதன நெருக்கடி யில் சிக்கியுள்ளது. வங்கியின் வாராக் கடன் அதிகரித்ததால் அந்த வங்கி யின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப் பாட்டையும்  ரிசர்வ் வங்கி தன் வசத்திற்கு கொண்டுவந்துள்ளது.  டிஎச்எப்எல் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் 13ஆயிரம் கோடி ரூபா யைக் கடனாகப் பெற்றுப் போலி யான 79 நிறுவனங்களுக்கு அந்தப் பணத்தைக் கடன்கொடுத்ததாகக் கூறி மோசடி செய்துள்ளது. டிஎச்எப்எல் நிறுவனத்தின் மொத்தக் கடனில் 4 ஆயிரத்து 450 கோடி ரூபாய் ராணா கபூரின் யெஸ் வங்கியில் பெற்றதாகும். இந்தக் கடன் திரும்பச் செலுத்தப்படாமல் வாராக்கடனாக உள்ளது. இதற்குக் கைம்மாறாக ராணா கபூரும், அவ ரின் மகள்கள் இருவரும் இயக்குநர் களாக உள்ள டூயிட் அர்பன் வெஞ் சர்ஸ் எனப்படும் நிறுவனத்தில் டிஎச்எப்எல் 600 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.  இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்தி ருந்தனர். இந்நிலையில் வெள்ளி யன்று மாலை மும்பை ஒர்லியில் உள்ள ராணா கபூரின் வீடு மற்றும்  அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது.  வெள்ளி இரவில் ராணாகபூரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.பின்னர்  சனிக்கிழமை தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலு வலகத்துக்கு அவரை அழைத்துச் சென்று, அங்கு பகலிரவாக விசார ணை தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து ஞாயிறன்று  அதிகாலை 4  மணியளவில் அவரைக் கைது செய்தனர். செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்த பின்னர் அவரை விடுமுறைக்காலச் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்குச் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும்  5 நாட்கள் காவலில் எடுத்து விசாரி க்க அனுமதி வேண்டும் என்றும் அமலாக்கத்துறையினர் நீதி மன்றத்தில் தெரிவித்தனர்.  இதை யடுத்து மார்ச்  11ஆம் தேதி வரை  காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார்.

;