tamilnadu

img

காந்தி அமைதி யாத்திரை துவங்கினார் யஷ்வந்த் சின்கா.. குடியுரிமைச் சட்டம், குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு

மும்பை:
மத்திய பாஜக அரசு, அண்மையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்தது. திட்டமிட்டே இஸ்லாமியர்களை மட்டும் இச்சட்டத்தில் புறக்கணித்தது.தற்போது, நாட்டை பிளவுபடுத்தக்கூடிய வகையிலான, குடிமக்கள் பதிவேடு, மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை கொண்டுவரவும் தீவிரம் காட்டி வருகிறது.இந்நிலையில், குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த்சின்கா, ‘காந்தி அமைதி பயணம்’ துவங்கியுள்ளார்.மும்பை ‘கேட்வே ஆப் இந்தியா’வில், புதன்கிழமையன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் வஞ்சித் பகுஜன் அகாதி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர்உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுஇந்த பிரச்சாரப் பயணத்தை, துவக்கி வைத்தனர்.மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த பயணம், ஜனவரி 30-இல் தில்லி ராஜ்காட்டிலுள்ள காந்தி சமாதியில் முடிவடைகிறது.

;