tamilnadu

img

பொதுமுடக்கத்தை நீட்டிப்பது இரண்டு வகைகளில் ஆபத்து

மும்பை:
மே மாதத்துக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட் டால் இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இப்போது வரையில் 4,021 பேர் உயிரிழந்துள் ளனர். மேலும் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் ஊரடங்கு காலம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.ஆனால், ஊரடங்கு நீட் டிக்கப்பட்டால் இந்தியப் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று மகிந்திரா நிறுவனத் தலைவரான ஆனந்த் மகிந் திரா கூறியிருக்கிறார்.இதுகுறித்து அவர் தனதுட்விட்டர் பக்கத்தில், “ஊரடங்கு நீட்டிக்கப்படுவது பொருளாதார வீழ்ச்சியை மட்டும் ஏற்படுத்தாது. அது மன ரீதியாகவும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். உளவியல் ரீதியாகப் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்; கொரோனா அல்லாத பிற நோயாளிகளை நாம் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கும் பெரும் ஆபத்தும்இதில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“பொதுமுடக்கத்தை நீட்டித்தால் மட்டுமே கொரோனாபாதிப்புகளைக் கட்டுப் படுத்திவிட முடியாது. சிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்; கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயரும் நிலையில், ஆக்ஸிஜன் சப்ளை மற்றும் மருத்துவமனை படுக்கைகளை விரைவாக அதிகரிப்பதில் அரசு கவனம் செலுத்தவேண்டும். ராணுவத்தில் இதில் பெரும் நிபுணத்துவம் உள்ளது” என்றும் குறிப்பிட் டுள்ளார்.

;