tamilnadu

img

சாலை விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 16 பேர் பலி

மும்பை:
மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரேதசத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு விபத்துகளில் சொந்த ஊர்களுக்குச் சென்ற ஏழு புலம்பெயர் தொழிலாளர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் வேலை பார்த்து வந்த ஜார்கண்ட் மாநிலத் தொழிலாளர்கள், போதிய வருவாய் இல்லாததால் சொந்த ஊர்களுக்குபேருந்தில் புறப்பட்டனர். அவர்கள் பேருந்து யவத்மால்பகுதியில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்த போது முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நான்கு புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பேருந்து சோலாப்பூரிலிருந்து ஜார்கண்ட் சென்று கொண்டிருந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. அதே சமயத்தில் தில்லி யில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சரக்கு வேன்ஒன்று புலம்பெயர் தொழி லாளர்களை ஏற்றி வந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் கமல்புரா பகுதியில் உள்ள ஜான்சி - மிர்சாபூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்த போதுடயர் வெடித்து விபத்துக்கு உள்ளானது. இதில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்த தாக மஹோபா காவல் கண்காணிப்பாளர் தெரி வித்தார். வேனில் 17 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படு கிறது.பீகார்  மாநிலம் பகல்பூர்மாவட்டத்தில் செவ்வாய்க் கிழமை அதிகாலைபேருந்துடன் லாரி மோதியதில் ஒன்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். கதிஹாரில் இருந்து சுமார் ஒரு 12 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ககரியா பக்கிற்கு செல்லும் வழியில்  இந்த விபத்து நடந்தது.

;