tamilnadu

img

இந்து இந்தியாவையோ, முஸ்லிம் இந்தியாவையோ அல்ல.... நம் முன்னோர் கட்டமைத்தது குடியரசு இந்தியாவை மட்டுமே!

மும்பை:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்குஎதிராக, நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்றுவருகிறது. அவற்றை ஒடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாகமேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், “அரசு கொண்டுவரும் சட்டங்களை எதிர்த்துப் போராடஅனைவருக்கும் உரிமை உண்டு” என்று உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் தில் பி.டி. தேசாய் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி, சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் கலந்துகொண்டு, ‘இந்தியாவை உருவாக்கும் வண் ணங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:“நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், ‘ஒரு இந்து இந்தியா’ மற்றும் ‘ஒரு முஸ்லிம் இந்தியா’ என்ற கருத்தை நிராகரித்தனர். அவர்கள்இந்திய குடியரசை மட்டுமே அங்கீகரித்தனர். இந்திய அரசியலமைப்பு பன்மைத்துவத்தை எதிர்பார்க்கிறது. எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ இந்தியா என்ற தத்துவத்தின்மீது ஏகபோக உரிமை கோர முடியாது.எனவே, பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் அடையாளத்தைப் பாதுகாப்பது நமது நேர்மறையான கடமை.

சட்டத்தின் எல்லைக்குள், தாராளமய ஜனநாயக நாடுகள் தங்கள் குடிமக்கள் தங்கள் கருத்துக்களை ஒவ்வொரு முறையிலும் வெளிப்படுத்தும் உரிமையை உறுதி செய்கின்றன. இதில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் கருத்து வேறுபாடுகளை வெளிப் படுத்துவதற்கும் உரிமை உண்டு. அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும் நாம் உறுதிபூண்டுள்ளோம். அந்த வகையில், இந்தியாவில்எதிர்க்கருத்து கொண்டவர்களையும், கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் ‘தேச விரோதிகள்’ என்று முத்திரைகுத்துவது ஜனநாயகத்தின் இதயத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.”இவ்வாறு டி.ஒய். சந்திரசூட் பேசியுள்ளார்.

;