tamilnadu

img

எவ்வளவு காலம்தான் அடுத்தவரையே குறை சொல்லிக் கொண்டு இருப்பீர்கள்? நாட்டை முன்னேற்ற ஏதாவது வழி தேடுங்கள்

மும்பை:
அடுத்தவர்கள் பற்றி குறை கூறுவதை நிறுத்தி விட்டு, நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைத் தடுப்பதற்கான வழி இருக்கிறதா? என்று பார்க்குமாறு, மத்திய பாஜக அரசை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விளாசி எடுத் துள்ளார்.தற்போதைய நிலையில் நாட்டு மக்கள் கடும் பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டிருப்பதாகவும் மன்மோகன் சிங்தெரிவித்துள்ளார்.

இந்திய வங்கித் துறையில் சமீப காலமாகவே மோசடிகள் அதிகரித்து வருகின்றன. கடன் பெற்றுவிட்டு நாட்டை விட்டே தப்பியோடுவதும், போலியான ஆவணங்களைக் காட்டி, கடன் வாங்கிஏமாற்றுவதும் வாடிக்கையாகி விட்டது. அண்மையில் பஞ்சாப் - மகாராஷ்டிர வங்கியில் (பிஎம்சி) ரூ. 2500கோடி அளவிற்கு மோசடிகள் நடந்திருப்பது தெரியவந்ததை அடுத்து, அந்தவங்கியின் நடவடிக்கைகளையே ரிசர்வ்வங்கி முடக்க வேண்டியதானது.பாரதஸ்டேட் வங்கி போன்ற நாட்டின் பெரிய
வங்கிகளிலும் அதிகளவில் கடன்மோசடிகள் நடந்திருப்பது அண்மையில் தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக பாஜக அரசை நோக்கி, கேள்விகள் எழுந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங்பிரதமராக இருந்தபோதுதான் வங்கித் துறை வீழ்ச்சியைச் சந்தித்ததாக, தற்போதைய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பழியைத் தூக்கிப் போட்டார்.இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த மன்மோகன் சிங், நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.“2018ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார மதிப்பு 2.7 லட்சம் கோடி டாலராகஇருந்தது. இதை 2024-ஆம் ஆண்டுக் குள் 5 லட்சம் கோடி டாலராக உயர்த்தஇலக்கு வைத்துள்ளனர். ஆனால், அந்தஇலக்கை அடைவதற்குக் குறைந்தது 10 முதல் 12 சதவிகித வருடாந்திர வளர்ச்சியை இந்தியா கொண்டிருக்க வேண்டும்.மோடி அரசோ ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சியில், வீழ்ச்சியைத் தான் சந்தித்து வருகிறது.பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டும் என்றால் பிரச்சனை என்ன என்பதை சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடும் அறிவிப்புகளை பார்த்தால், பிரச்சனை என்ன என்பதே இந்த அரசுக்கு தெரியவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுகிறார் களே, தவிர பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவில்லை. பிரச்சனைகள் என்னவென்றே தெரியாமல் இவர்களால் தீர்வு காணவும் முடியாது. அப்படியிருக்கையில், 2024-ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பை அடையச் சாத்தியமே இல்லை.தற்போதைய அரசானது எதிர்க்கட்சியினர் மீதும் எதிராளிகள் மீதும் குறைகூறுவதை நிறுத்திவிட்டு, பொருளாதார வீழ்ச்சிக்கான காரணிகளைக் கண்டறிந்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகப்படியான தொழிற்சாலைகள் மூடப்பட்டமாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கும் மேல் சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. நாசிக், அவுரங்காபாத், நாக்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளிலும், சீன இறக்குமதி அதிகரிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புறங்களில் மூன் றில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது, இதனால்குறைந்த சம்பளம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று நமது இளைஞர்கள் கிடைத்த வேலையில் சேர்ந்து வருகிறார்கள். கிராமப்புறங்களில் வேலைஇல்லாத் திண்டாட்டம் காரணமாக,ஊர்களைக் காலி செய்து மக்கள் வெளியேறும் போக்கு அதிகரித்துள்ளது. ஒருகாலகட்டத்தில் அதிகப்படியான முதலீடுகளை ஈர்ப்பதில், மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் இருந்தது. இப்போதுவிவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதில்தான் முதலிடத்தில் உள் ளது. மத்திய அரசின் இறக்குமதி - ஏற்றுமதி கொள்கைகளாலும், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர். இந்த பிரச்சனைகளை சீக்கிரம், சரி செய்யாவிட்டால், நாட்டு மக்கள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.” இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

;