மும்பை:
உலகப் புகழ்பெற்ற வோக் இதழ், தனதுஅட்டைப்படத்தில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவின் படத்தை பிரசுரித்து’இந்த ஆண்டுக்கான வோக் இந்தியா பெண்’ (வோக் இந்தியா வுமன்ஆப் தி இயர்)என பெருமைப் படுத்தியுள்ளது.அந்தந்த துறைகளில் சிறந்து விளங் கிய பெண்கள் வோக் வுமன் ஆப் தி இயர் தொடரில் இடம் பெறுவார்கள்.2020 ஆம் ஆண்டின் சிறந்த பெண் என்ற தலைப்புடன் அமைச்சர் கே.கே.சைலஜா, வோக்கின் நவம்பர் மாத அட்டையில் இடம்பெற்றார்.கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்வதில் கேரளம் எவ்வாறு முன்னிலை பெற்றது என்பது பற்றியஅமைச்சர் சைலஜாவின் பேட்டியும் வோக்-இல்இடம்பெற்றுள்ளது. “பயப்பட நேரமில்லை.பயப்படுவதை விட இந்த நெருக்கடியை சமாளிப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன், ”என்று கே.கே. சைலஜாவோக்-கிற்குஅளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
திரைப்பட நட்சத்திரங்கள் பஹத்பாசில், நஸ்ரியா நசீம், ரீமா கல்லிங்கல்ஆகியோர் ஏற்கனவே கே.கே.சைலஜாவை தாங்கிய வோக்கின் அட்டைப் பக்கத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். நெருக்கடி சூழ்நிலைகளை கையாள்வதில் உலகின் பெண்தலைவர்களின் சிறப்பை இந்த பத்திரிகைசுட்டிக்காட்டுகிறது. நியூசிலாந்தின் ஜெசிந்தா ஆண்டன், ஜெர்மனியின் ஏஞ்சலா மெகெல், தைவானின் சாய் இங் வென் ஆகியோருக்கு இணையாக கே.கே. சைலஜாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.‘வோக் வாரியர்ஸ்’ என்கிற வோக்கின் பட்டியலில் ஏற்கனவே கே.கே.சைலஜா இடம் பிடித்தார். அன்று, அரசுப்பணியை ஆசிரியையாக தொடங்கிய சைலஜா சுகாதார அமைச்சர் என்கிற நிலையில் இன்றுஅவர் மேற்கோள்ளும் பணிகள் முன்மாதிரியாக உள்ளது என கோவிட் பாதுகாப்புக்கான கேரள மாதிரியைப் பாராட்டி கே.கே.சைலஜாவை வோக் இதழ் சிறப்பித்துள்ளது. பொது சுகாதாரம், கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் கேரளா ஏற்கனவே முன்னணியில் உள்ளதை அந்தக் கட்டுரை தெரிவித்துள்ளது.