tamilnadu

img

சர்வதேச கல்வி மையம் அமைவதே அண்ணல் அம்பேத்கருக்கு சிறப்பு.... 350 அடி உயர சிலையால் யாருக்கு பயன்?

மும்பை:
அண்ணல் அம்பேத்கருக்கு மிக உயரமான சிலை அமைப்பதற்குப் பதில், அவரது பெயரில் சர்வதேச கல்வி மையம் அமைக்கலாம் என்று அம்பேத்கரின் பேரனும், வஞ்சித் பகுஜன் அகாதி கட்சியின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது:டாக்டர் அம்பேத்கரின் பெருமையை அவருடைய சிலையின்உயரத்தை வைத்துக் கணக்கிடுவது தவறாகும். அவர் அரசியலுக்குச் செய்துள்ள சேவைகளை வைத்தே கணக்கிட வேண்டும். தற்போது அம்பேத்கருக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே 100 அடிஉயர சிலை நிறுவ முடிவுசெய்திருப்பது மகிழ்ச்சியானது.

ஆனால், இதுபோன்ற நினைவுச் சின்னங்களை அமைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடந்த 1998-99இல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், ‘அம்பேத்கர்சர்வதேச கல்வி மையம்’ அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், அதன்பிறகு வந்த மாநில பாஜக, காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.மும்பையில் அம்பேத்கருக்கு இன்னொரு சிலை வைப்பதால், என்ன நன்மை ஏற்படும்? முந்தைய சிலைகளைவிட இது உயரமாக இருக்கும். அவ்வளவுதான். இதை வைத்து, ஒவ்வொருஅரசியல் கட்சியும் தங்களுக்குப் பெருமை தேடிக்கொண்டு தங் கள் வாக்குவங்கியை வலுவாக்க முயற்சி செய்யும். நாம் அம் பேத்ரிகன் பெருமையை ஒருசுற்றுலா மையமாக குறைத்துவிடக் கூடாது.” இவ்வாறு பிரகாஷ் அம்பேத்கர் பேசியுள்ளார்.

;