“இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் இன்று தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி
வாக்காளர் பட்டியல் முறைகேடு
வாக்குத் திருட்டு சம்பவம் மூலமாகவே மத்தியி லும், மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றி வரு கிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக் கிழமை அன்று குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ராகுல் காந்தி தலைமையில், காங்கி ரஸ், திமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள், சமாஜ் வாதி, சிவசேனா (உத்தவ்), திரிணா முல் காங்கிரஸ், தேசியவாத காங்கி ரஸ் (சரத்), தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சி களின் எம்.பி.,க்கள் தில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவ லகத்தை நோக்கி பேரணியாக செல்ல உள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவ லகத்தை நோக்கி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குச் செல்லும் இந்த பேர ணியில் 300 எம்.பி.,க்கள் பங்கேற்க உள்ளனர். பேரணியின் முடிவில் தலை மைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களையும் எம்.பி.,க்கள் குழு சந்திக்க உள்ளனர். இந்த பேரணி திங்கள்கிழமை காலை 11:30 மணிக்கு நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதே நாளில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தில்லி சாணக்கியபுரியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்களுக்கு இரவு விருந்தும் அளிக்க உள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.