tamilnadu

img

தமிழ் சாகித்திய அகாடமி விருது வழங்க எழுத்தாளர் கல்பட்டா நாராயணன் கோரிக்கை

திருநெல்வேலி, நவ.27- தமிழ் சாகித்திய அகாடமி விருது வழங்கப் பட வேண்டும் என கேரள மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கல்பட்டா நாராயணன் கோரிக்கை விடுத்துள்ளார். திருநெல்வேலியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பொருநை இலக்கியத் திருவிழா வின் தொடக்க விழாவில், கலந்துகொண்டு கல்பட்டா நாராயணன் பேசியதாவது: இது என்னுடைய தாய் மொழியின் தாய் மண். இங்கு மிக அழகாக இலக்கியத் திருவிழா நடத்தப்படுகிறது. கம்பனில் தொடங்கி புதுமைப் பித்தன், வண்ணதாசன் என ஏராளமான எழுத்தாளர்களை தமிழகம் தந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தமிழ் சாகித்திய அகாடமி விருது வழங்கப்படவில்லை.  ஆண்டு தோறும் தமிழ் சாகித்திய அகாடமி விருது வழங்க வேண்டும் என இந்நிகழ்ச்சியில் பங் கேற்றுள்ள அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். விருது வழங்குவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்.

ஆண்டுதோ றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் பேசியதா வது: பொதிகை மலையில் பிறந்து புன்னைக் காயல் வரை பாய்ந்தோடும் தாமிரவருணி கரையில் இருந்து தமிழக அரசு இலக்கியத் திருவிழாவைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிய ளிக்கிறது. படைப்பாளிகள் அழைத்ததால் தனது படித்துறைகளை விட்டுவிட்டு தாமிர வருணி நதி இலக்கிய அரங்கிற்குள் அமர்ந்தி ருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழின் வளர்ச்சிக்காக ஐந்து இடங்களில் நடத்தப்படும் இலக்கியத் திருவிழா, தேர்த் திருவிழாக்களைப் போல ஆண்டுதோறும் தொடர வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார்.

;