tamilnadu

img

அறந்தாங்கி வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை

அறந்தாங்கி  வேலைவாய்ப்பு முகாமில்  தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை

அறந்தாங்கி, ஜுன் 30-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் டி.என்.எஸ் மஹாலில் அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன் ஏற்பாட்டில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும், வெளிமாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்டனர். முகாமில் புளூ ஓசன் உள்ளிட்ட சென்னையில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் தகுதியின் அடிப்படையில் முகாமில் கலந்து கொண்டவர்களை தேர்வு செய்தனர்.  வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 900 பேர் கலந்து கொண்டனர். இதில் 350 நபர்களை கம்பெனிகள் பணிக்காக தேர்வு செய்தன. தேர்வு செய்தவர்களுக்கான பணி ஆணையினை அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி. ராமச்சந்திரன் வழங்கினார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் நகர, வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.