tamilnadu

img

தூங்கா நகரை “கொரோனாவால்” ஓய்த்துவிட முடிவா? மாயமாய் மறைந்து போன முகக்கவசங்கள் மாவட்ட நிர்வாகம், காவல்துறை கவனிக்குமா?

மதுரையில் கொரோனா பர வல் அதிகரிக்கும் அபாயம் மிக, மிக அதிகமாக உள்ளது. மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ கண்டுகொள்ளவில்லை. மதுரையில் சிறு வணிக நிறு வனங்கள் உட்பட அனைத்து நிறு வனங்களும் திறக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து மக்கள் அதிகளவில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வ தற்கு வெளியேவரத் தொடங்கிவிட்ட னர். எப்போது ஆட்கள் வெளியே வருவார்கள். அரசுக்கு வசூல் செய்து தருவோம். காவல்துறை உயரதிகாரி களிடம் நற்பெயரெடுப்போம் என சார்பு ஆய்வாளர்கள், ஆய்வாளர் கள் காத்திருந்துள்ளனர். 70 நாட்களுக்குப் பிறகு வேலைக்குச் செல்லும் தொழி லாளர்களைப் பிடித்து ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி ரூ.100 அபராதம் விதித்து வருகின்றனர். மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.10 அல்லது ரூ.20 பெற்றுக்கொண்டு தர மான மாஸ்குகளை காவல்துறை வழங்கினால் அது மக்களிடம் பாராட் டைப்பெறும். மக்களும் விழிப்புணர்வு பெறுவார்கள். மாஸ் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் என்பது மக்களை வதைப்பதாகும். இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவாது.

காவல்துறையைப் பார்த்தால் ஒரு வித அச்ச உணர்வு தான் ஏற்படும்  காவல்துறையில் குறைபாடுகள் உள்ள அதே நேரத்தில் மக்களும் தங்க ளுடைய, தங்களுடைய குடும்பத்தின் பாதுகாப்பை உணரவில்லை என்றே தோன்றுகிறது. சாலைகளில் முகக்கவ சம் அணியாமல் செல்வது, கூட்டமாக நின்று பேசுவது என்பது அதிகரித்துள் ளது. சென்னை, கோயம்புத்தூர், திருப் பூர் நகரங்களில் வேலையின்றி தவித்து வரும் மதுரை மக்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர். அவர்களை பரிசோதிக்க மதுரை மாவட்ட நிர்வாகம் போதிய நட வடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில தினங்களாக மதுரையில் நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. வெள்ளியன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது.

மக்களிடையே அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் சென்னைபோல் தூங்கா நகரமான மதுரையிலும் கொரோனா பரவல் வேகமெடுத்துவருகிறது. கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் 12- ஆம் தேதி வரை மதுரையில் 134 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். ஒப்பீட்டளவில் இது கடந்த நாட்களை விட அதிகம். குறிப்பாக ஜூன் 12 ஆம் தேதி 31 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.  சென்னையில் இருந்து இ-பாஸ் பெறாமல் மதுரைக்கு மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து வரு பவர்களை பரிசோதிக்க வேண்டும். ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து எத்தனை பேர் வந்துள்ளனர். எத்தனை பேர் பரி சோதிக்கப்பட்டுள்ளனர் என்ற விப ரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும். மதுரை நகரில் ஓடும் பேருந்து களில் தனி மனித இடைவெளியை முற்றாக போக்குவரத்துக்கழக நிர் வாக இயக்குநர்கள் ஒழித்துவிட்டனர். குறிப்பாக போக்குவரத்து கழக குடும்பத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள், அவர்களது குடும்பங்க ளையாவது பாதுகாக்க வேண்டு மென்ற எண்ணம் துளியும் அதிகாரி களுக்கு இல்லை.

மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதற்கு வசதியாக கூடு தல் பேருந்துகளும் இயக்கப்பட வில்லை. மக்கள் எப்படிப்போனால் என்ன என்ற மனநிலையில் உள்ளது போக்குவரத்துக்கழகம். போக்குவரத்துக்கழக பேருந்து களின் வசூலை கணக்கிட்டால் தனி மனித இடைவெளி கடைப்பிடிக்கப்படு கிறதா? இல்லையா? என்ற உண்மை தெரிந்துவிடும். அதற்குக் கூட மாவட்ட ஆட்சியரோ, அதிகாரிகளோ தயா ரில்லை. மதுரை காளவாசல் மேம்பாலம் திறப்பு விழாவில் மக்கள் பிரதிநிதி களுக்கு அழைப்பு இல்லை எனக் கூறிய மதுரை மாவட்ட நிர்வாகம் அரசு அதிகாரிகள் மட்டும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்தால் போதும் என்று கூறியது. ஆனால், அதிமுக உறுப்பி னர்கள் அதிகம் இருந்தார்கள் அங்கே தனி மனித இடைவெளியிருந்ததா? ஆட்டோக்களில் இருவர் மட்டுமே பயணிக்கவேண்டும். கொரோனா பர வலை அதன் மூலம் தடுக்கலாம் என்றது அரசு.

ஷேர் ஆட்டோக்களில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்பதை ஆட்சியரின் பார்வைக்கே விட்டுவிடலாம். குறைந்தது ஐந்து பய ணிகள் இல்லாமல் ஆட்டோக்கள் இயங்கவில்லை. குறிப்பாக பொதுப்போக்கு வரத்தையும், ஆட்டோக்கள் இயக் கத்தையும் மக்கள் கூட்டத்தை யும் அதிகாரிகள் கட்டுப்படுத்த வில்லையெனில் மதுரை மற்றொரு சென்னையாக மாறிவிடும். இதற்கிடையில் மதுரையில் மக் கள் அதிகம் கூடும் வண்டியூர், மாட்டுத் தாவணியில் இயங்கி வரும் காய்கறி, பழம் மார்க்கெட், யானைக்கல், கீழ வாசல், பரவை மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் பாதுகாப்பு முகக் கவசம் அணிப வர்கள் குறித்து ஒரு ஆய்வை கடந்த இருதினங்கள் நடத்தியது. வண்டி யூர் மார்க்கெட்டில் 430 பேரை ஆய் வுக்குட்படுத்தியதில் 263 பேர் முகக்கவ சம் அணிய வில்லை. மற்ற பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் பேரை ஆய்வு செய்த தில் என்பது சதவீதம் பேர் முகக்கவ சம் அணியவில்லை என்பது தெரியவந் துள்ளது. - ஜெ.பொன்மாறன்

;