tamilnadu

img

18 மாதமாக சம்பளமின்றி தவிக்கும் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்கள்

மதுரை:
தமிழகம் முழுவதும் தொலை தொடர்புத்துறையில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ௧டந்த ஓராண்டிற்கும் மேலாக சம்பளமின்றி தவித்துவருகின்றனர். பொதுத்துறை பாதுகாக்காமல் மத்திய அரசு தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது.

நிதியில்லை என்ற பொய்யான காரணம் கூறப்படுகிறது. பொதுத்துறையான பிஎஸ்என்எல்ஐ பாதுகாக்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கவேண்டுமென வலியுறுத்தி மதுரை தல்லாகுளம்பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் செவ்வாயன்று தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழ் நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மதுரை தொலைத் தொடர்பு மாவட்டத் தலைவர் என்.சோனைமுத்து, பிஎஸ்என்எல் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.முருகேஷ்பாபு, பிஎஸ்என்எல் தொழிலாளர் சங்க மாநில ஒருங்கிணைப்பு செயலாளர் ரிச்சர்ட், ஒப்பந்த ஊழியர் சங்கமாவட்டத் துணைச் செயலாளர் உமா தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

பழனியில் நடைபெற்ற போராட்டத் திற்கு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஜான் போர் ஜியா தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் அய்யனார்சாமி, வைத்தியலிங்க பூபதி,ஜோதிநாதன், ஜோசப்ராஜ் உள்ளிட்ட பலர் பேசினர்.

;