tamilnadu

உங்கள் தந்தை என்ன ஸ்டெப் எடுத்தார்?

உங்கள் தந்தை என்ன ஸ்டெப் எடுத்தார்?


‘திண்டுக்கல் - சபரிமலைரயில் பாதைத் திட்டத்தில் லோயர் கேம்ப் வரை முதற்கட்டமாக ரயில் சேவை கொண்டுவர முயற்சி செய்வேன்’ - தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ப.ரவீந்தரகுமார் பேச்சு(மாலை மலர் 08.04.2019) 


லோயர் கேம்ப்புக்கு ரயில் சேவை வருவது அப்புறம் இருக்கட்டும். பத்து வருசமா மதுரை - போடி அகல ரயில் பாதைத் திட்டம் அப்படியே கிடக்குதே. பலகட்ட போராட்டத்த வாலிபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் நடத்துனாங்களே. அதுக்கு போடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் முதல்வர் - இந்நாள் துணை முதல்வர், தர்மயுத்தம் புகழ் உங்கள் தந்தை யார் என்ன ஸ்டெப் எடுத்தார்னு கொஞ்சம் எங்களுக்கு சொல்லுங்களேன், ப்ளீஸ். 

-க. மன்னன்



எதற்கு இந்த ஸ்டண்ட் டாக்டர்?


எட்டுவழிச் சாலை திட்டம் ரத்தை எதிர்த்து மேல் முறையீடு:அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி உறுதி (தினமணி 09.04.2019)


எட்டுவழிச் சாலை வழக்கில் அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தால்நான் அதை எதிர்த்து கேவியட் மனு தாக்கல் செய்வேன் அன்புமணி ராமதாஸ் (தி ஹிண்டு 09.04.2019)


ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் உச்சகட்டத்தில் இருக்கும்போது ஒரு லட்சம் மரங்களை வெட்டிச் சாய்க்கும் எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு வேகவேகமாக ஒப்புதல் வழங்கிய பாஜகவுடனும், அராஜகமாக விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறிக்க முனைந்த அதிமுகவுடனும் கூட்டு சேர்ந்து நாணலாக வளைந்து முடித்தாயிற்று. துரோகம் செய்த அதிமுக-பாஜகவுக்கும் துணை போயிருக்கும் உங்களுக்கும் ஓட்டு இல்லை என்று தர்மபுரி மக்களும் முடிவெடுத்துவிட்டனர். ஐந்து ஆண்டுகளாகத் தொகுதிப் பக்கம் தலையே காட்டாமல் இப்போது எதற்கு இந்த ஸ்டண்ட் டாக்டர்?


நயினார் நாகேந்திரனை வைத்துக் கொண்டு இப்படி பேசலாமா?


அதிமுக-வை அழிக்கப் பார்க்கிறார் ஸ்டாலின். ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுஇந்து தமிழ் திசை 09.04.2019


பன்னீர்செல்வம் அவர்கள் இப்படிப் பேசியிருப்பது எங்கே தெரியுமா? இராமநாதபுரத்தில்.பன்னீரும் எடப்பாடியும் போட்டி போட்டுக் கொண்டு அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துக் கொண்டிருக்க, நேரடியாகவே பாஜகவுக்குப் போய் ஐக்கியமாகிவிட்டு, இப்போது அங்கே பேரம் பேசி சீட்டும் பெற்றுவிட்ட முன்னாள் அதிமுகஅமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத்தில் வாக்குக் கேட்டு நடந்த கூட்டத்தில்தான் ஓபிஎஸ் இப்படி முழங்கியிருக்கிறார். இவங்க எல்லாரும் இப்படி அதிமுகவை போட்டி போட்டு அழிச்சுக்கிட்டு இருக்குறப்ப எதுக்குத் தேவையில்லாம ஸ்டாலின் பேரையெல்லாம் இழுக்குறாரு? என்று வேதனையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள் எம்ஜிஆர்- ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள். 



;