tamilnadu

img

அவதூறாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காத்திருப்பு போராட்டம்

விளாத்திகுளம். ஜூன் 21- பொதுமக்களிடம் அவதூறாக பேசிய பிடிஓ அரவிந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சீரான குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில்  போராட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட வீரபாண்டிய புரம் கிராமத்தில் 100 நாள் வேலை  திட்டத்தின் கீழ் இயந்திரத்தை  பயன்படுத்தி நடைபெற்ற மோசடி குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 3ஆம் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து விளாத்திகுளம் பிடிஓ அரவிந்தன் குளத்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரை அழைத்துச் சென்று பொதுமக்களை  அவதூறாக பேசி மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து விளாத்தி குளம் பிடிஓ அரவிந்தன் மற்றும் நூறுநாள் வேலை பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மேலும் பல நாட்க ளாக சீவலப்பேரி குடிநீர் வழங்கா ததை  கண்டித்தும் விரைவில் குடிநீர் வழங்க கோரியும் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும்    வீரபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற் பட்ட பொதுமக்கள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயகுமார், இன்ஸ்பெக் டர் பத்மநாபன்பிள்ளை, விளாத்தி குளம் துணை பிடிஓ காசிராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை  நடத்தி னர். பேச்சுவார்த்தை யின் முடிவில் விளாத்திகுளம் பிடிஓ அரவிந்தன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு விட்டதால் வீரபாண்டியபுரம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பணித்தள பொறுப்பாளர் உடனடி யாக மாற்றம் செய்யப்படுவதா கவும் அதற்கு பதிலாக வேறு ஒரு பணித்தள பொறுப்பாளர் செயல் படுவார் என்றும்,மேலும் 100 நாள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக் கும் 100 நாட் வேலை வழங்குவதா கவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் வீரபாண்டியபுரம் கிராமத்திற்கு தடையில்லாத குடிநீர் வழங்க கேட்டுக்கொள்வதாகவும் எழுத்துப்பூர்வமாக உத்தரவினை துணை பிடிஓ காசிராஜன் வழங்கி னார்.  இதனையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. போராட்டத்திற்கு  விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் கு.ரவீந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்  சண்முகராஜ், விளாத்திகுளம் சிபிஎம் தாலுகா செயலாளர் புவி ராஜ் மற்றும் ராமலிங்கம், ஜோதி, சூசைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;